வயநாடா? வயல்காடா?
இயற்கையான சூரமலை அழிந்ததால்
செயற்கையான கோரநிலை வந்ததோ?
இயற்கையான அட்டமலை அழிந்ததால்
செயற்கையான அடைமழை வந்ததோ?
இயற்கையான வாடிக்கை மாறியதால்
செயற்கையான முண்டக்கை தடம் இடம் மாறியதோ?
இயற்கையான வயல்காடு தடம் மாறியதால்
செயற்கையான வயநாட்டின் இடம் தடம் மாறியதோ?
இயற்கையாலோ செயற்கையாலோ இரந்து இறப்போர் எஸ்டேட்டிலும் ஏழைகள்தானே!
- தஞ்சை த இராமநாதன்

கொடுமையிலும் கொடுமை,கொடூரம் இறைவா!
ReplyDelete🤝
ReplyDelete