என்னைப் பெற்றோரே!
பெற்ற பயனை நீவிர் பெற என்னைப் பெற்றீரே என் பெற்றோரே
பிறந்த பயனை நான் பெறவும் என்னைப் பெற்றுள்ளீர் என் பெற்றோரே!
மனித நேயத்தோடு வாழ என்னைப்
பெற்றீரே என் பெற்றோரே
மனித தர்மத்தோடும் வாழும் என்னைப்
பெற்றுள்ளீர் என் பெற்றோரே!
அன்புத் துணையோடு வாழ என்னைப்
பெற்றீரே என் பெற்றோரே
அன்பு இணையோடும் வாழும் என்னைப்
பெற்றுள்ளீர் என் பெற்றோரே!
அயல் நாட்டில் வாழும்படி என்னைப் பெற்றீரே என் பெற்றோரே
அருமையான நாட்டில் வாழ என்னைப் பெற்றுள்ளீர் என் பெற்றோரே!
- தஞ்சை த இராமநாதன்

அருமை
ReplyDelete🙏🙏
Delete🙏 💐
ReplyDelete🙏🙏
Delete