Wednesday, 7 February 2024

எளிய கேள்வியும் குழப்பும் பதிலும்

 


எளிய கேள்வியும் குழப்பும் பதிலும் 

உழவர் பின்னே உலகென்றால் அர்த்தம் என்ன?
உழவுத் தொழில்தான் உலகிலேயே முதன்மையான தொழில்!

இதெல்லாம் இப்போதைக்கு ஒத்து வருமா?
இது எப்போதும் எங்கேயும் ஒத்து வரும்!

விளைந்த பொருளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில்லையே ஏன்?                                                    விலை இருக்கிறதோ இல்லையோ பசியாற உணவு வேண்டுமே!

உண்டு கொழுப்பவர்கள் உழைக்கும் உழவரை மதிப்பதில்லையே ஏன்?
உழவர் என்றாவது ஒரு நாள் உயர்ந்த நிலையை அடையப்போவது உறுதி!

உழவுத் தொழில் செய்யும் ஆணை எந்தப் பெண்ணும் மணப்பதில்லையே ஏன்!
மணக்க ஏங்கும் மனநிலை என்றாவது ஒரு நாள் வந்துவிடும் உறுதி!

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது உண்மைதானோ?
உழக்குக் கணக்கெல்லாம் காலாவதியான கணக்கு!

உழவர் பின்னே உலகு என்பதும் காலாவதியான கணக்குதானே?                                                                                  உம்மோடு எனக்கு எதற்கு பிணக்கு?

- தஞ்சை த இராமநாதன்

2 comments: