வாங்கித் தின்னும் கூட்டமானோமோ?
வந்தாரை வாழ வைத்ததுப் போய்
இருந்தாரை வீழ வைத்தாயே ஓய்
மேழி பிடித்து ஏர் உழுததுப் போய்
எருதுகூட இல்லாதுப் போனதே ஓய்!
ஊருக்கே உணவளித்ததுப் போய் வாங்கித் தின்னும் நிலை வந்ததே ஓய் இல்லாதோர்க்கு அரிசி கொடுத்ததுப் போய்
இலவச அரிசி பிச்சை இல்லையா ஓய்?
தமிழனுக்கு உழவு வேலை மறந்து போய்
மாற்றோரை உழவு செய்ய விட்டாயே ஓய்
வைக்கோலில் போர் போட்டதுப் போய் அதை சுருட்டி வயலில் போட்டுட்டியே ஓய்!
புரியாத நாத்திகத்தைப் பேசப் போய்
புரிந்த ஆத்திகத்தை மறந்திட்டியே ஓய்
அந்நிய அநாகரிகத்தை அடையப் போய்
தனி நிலை நாகரிகத்தை இழந்திட்டியே ஓய்!
- தஞ்சை த.இராமநாதன்

Great effort , now a days finding time for person life (Work Life Balance) itself become difficult but Mr.Ramanathan able to do so much . Very proud of him
ReplyDelete🙏🙏
DeleteFeel very bad after read this, Forgot our values and where we are going ?
ReplyDelete🤝🤝
ReplyDelete