ஆண்டவா!
ஆண்டவர்கள் எல்லாம் ஆண்டவனை அடைந்தவர்களும் இல்லை
ஆள்பவர்கள் எல்லாம் ஆண்டவனை அடையப்போகிறவர்களும் இல்லை
ஆண்டவரை ஆண்டவனே என அழைப்போர் அதிகமாக உண்டு
ஆள்பவரை ஆள்பவனே என அழைப்போர் அரிதாக உண்டு
ஆண்டவனிடத்தில் அய்யோவென அறியாது துடிப்போர் பக்தகோடிகள்
ஆள்பவனிடத்தில் அய்யாவென அயராது துதிப்போர் பக்காகேடிகள்
ஆண்டவனை ஆண்டவர் என அழைக்கும் பணிவும் வேண்டும்
ஆள்பவரை ஆள்பவன் என அழைக்கும் துணிவும் வேண்டும்!
- தஞ்சை த.இராமநாதன்

மிக அருமை!
ReplyDelete🙏🙏
Delete