சந்திரயான் போல் சூரியான்
நிலவிற்குச் சந்திரயானைச் சாதனை செய்து அனுப்பினோம்
கதிரவனுக்கு சூரியானைச் சோதனை செய்து அனுப்புவோம்
கண்ணை மூடும் மெஞ்ஞானத்தால் பல கோள்களைக் காணலாம்
காணாததைத் தேடும் விஞ்ஞானத்தால் சில கோள்களைக் காணலாம்
பூமியின் வளத்தைச் சுரண்டித் தீர்த்து பூமியை முடிப்போம்
நிலவில் நிலத்தின் வளத்தைத் தீர்த்து நிலவையும் முடிப்போம்
பூமியைச் சொந்தமாக்கப் பல நாட்டினர் பலவாறு ஓடினோம்
நிலவைச் சொந்தமாக்கப் பல நாட்டினர் பலமாக ஓடுவோம்
கோள் விட்டு கோள் போய் பெண்ணைக் கொடுத்து எடுப்போம்
கோள் விட்டு கோள் போய் பொன்னை எடுத்துக் கொடுப்போம்
விண்ணைத் தாண்டி மண்ணைத் தேடி மகிழ்வைக் காணலாம்
மண்ணைத் தோண்டி மரபை நாடி புகழைக் காக்கலாம்!
- தஞ்சை த.இராமநாதன்

மிக நன்று!
ReplyDelete🙏🙏
ReplyDelete