ஒரு மரத் தோப்பு
ஒத்த மரத்தை மட்டும் வைத்து அதைத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது
செத்த மரத்தை மட்டும் வைத்து அதைத் தோப்பாவெனக் கேட்டிடவும் முடியாது
ஒத்த மரத்தோடு மத்த மரம் எதுவுமே சேராது தோப்பாகிடவும் முடியாது
மத்த மரத்தோடு ஒத்த மரம் எப்போதுமே சேராது தோப்பாகிடவும் முடியாது
ஒரு மரத் தோப்பென்றால் ஒரே மரத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது
ஒரே மரத்தின் தோப்பென்றால் பல மரத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது
ஒரு மரத் தோப்பை பல மரத் தோப்பெனச் சொன்னால் அது தப்பாகிட முடியாது
ஒரே இன மரத்தில் பல மரத் தோப்பெனச் சொன்னாலும் அது தப்பாகிட முடியாது
மாமரத் தோப்பை பழ மரத் தோப்பென அழைத்தால் அதைத் தவறென சொல்லிட முடியாது
மாம்பழ மரத் தோப்பை மாந்தோப்பென அழைத்தால் அதையும் தவறென சொல்லிட முடியாது
பழ மரத்தோடு பல தோப்பு இருந்தால் பணபலன் தருமெனக் கூறவும் முடியாது
பனை மரத்தோடு சில தோப்பு இருந்தால்
பனை பலன் தராதெனக் கூறவும் முடியாது!
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🙏🙏
Delete