வந்து தானாக வந்து சேர்ந்து விடும்
இதை எதுக்கு சொல்றேன்னா
இது வந்து உங்கள் நல்லதுக்குதான்
அதை எதுக்கு சொல்றேன்னா
அதுவும் வந்து உங்கள் நல்லதுக்கேதான்
எதுக்காக வந்து நீங்க இப்படி வந்து திடீரெனக் கோபப்பட்டீங்க?
அதுக்காகவா வந்து நீங்க இப்படி வந்து திடீரெனக் கோபப்பட்டீங்க?
எதுக்கு வந்து நீங்க அப்படி வந்து விழுந்து விழுந்து சிரிச்சீங்க?
அதுக்கு வந்தா நீங்க இப்படி வந்து விழுந்து விழுந்து சிரிச்சீங்க?
அதை வந்து சும்மா வந்து ஒரு சிரிப்புக்காக அப்படிச் சொன்னேங்க
இதை வந்து சும்மா வந்து ஒரு செய்திக்காக இப்படிச் சொன்னேங்க
எப்ப வந்து எதை வந்து சொல்வது சரியென்று உங்களுக்குத் தெரியாதா?
இப்ப வந்து அதை வந்து சொல்வது சரியாயென உங்களுக்குத் தெரியாதா?
அட எப்ப வந்தீங்க நீங்க
வாங்க வாங்க வந்து இப்படி உட்காருங்க
வந்ததைப் பற்றி எழுதிக் கொண்டு
நீங்க வந்ததைப் பார்க்கலீங்க!
- தஞ்சை த இராமநாதன்

அருமை 🙏👍
ReplyDelete🙏🙏
ReplyDelete👍👍👍
ReplyDelete🙏🙏
ReplyDelete