ஆதிக்கு சமமானதே சமாதி நிலை
வெய்யில் அடித்தால் சுடும் நிலைக்கு
மழையின் குளிரால் பெறுவது சமநிலை
தண்டவாளத்தில் தடம் புரளாது பயணம் தொடர ரயிலுக்குத் தேவை சமநிலை
அனைவருக்கும் பசியாற உணவுக் கிடைத்து விட்டால் எங்கும் சமநிலை
ஆணும் பெண்ணும் முழு உரிமையுடன் வாழ்ந்து விட்டால் வாழ்வில் சமநிலை
நல்லவரை வாழ்த்தி தீயவரை தாழ்த்திப் பேசினால் பேசும் பேச்சினில் சமநிலை
நியாயத்திற்குத் தட்டிக் கொடுத்து அநியாயத்தை அதட்டிக் கேட்டால் சமநிலை
ஆதி இறை நிலைக்கு சமமாக மனிதன் வாழ்ந்தால் சம+ஆதி= சமாதி நிலை!
- தஞ்சை த.இராமநாதன்

Nandri
ReplyDeleteSuper.
Delete🙏🙏
Delete🙏🙏
Deleteசிறப்பு!
ReplyDeleteதன்னை மறக்கும் நிலையும் சமாதியே!
🙏🙏
ReplyDeleteஉலக பொதுமுறை தத்துவக் கவிதை ......🙏
ReplyDelete🙏🙏
ReplyDelete