வீணர்களின் வெட்டி வேலை
அபகரிப்பில்லாமல் மரத்தோடு மரமாக வீட்டைக் கட்டி வாழ்வது தவறா? ஆரவாரமில்லாமல் உறவோடு உறவாக கூட்டைக் கட்டி வாழ்வதும் தவறா?
வேலையில்லாமல் வெட்டித் தனமாக
மரத்தை வெட்டி சாய்ப்பது சரியா?
மூளையில்லாமல் முட்டாள் தனமாக
மரத்தை முறித்து சாய்ப்பதும் சரியா?
வள்ளலார் வாழ்ந்த வழியை மறந்து மரத்தை கொலை செய்வது தீரமா?
பாரதியார் தந்த வரியை மறந்து குருவியை கொலை செய்வதும் வீரமா?
- தஞ்சை த இராமநாதன்

அருமை
ReplyDelete🙏
Delete