பிறப்பது எதற்காக?
ஆண்ட வீட்டு மகாராணியென வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
அண்டை வீட்டு மக ராணியென வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
கோட்டையில் இருந்து ஆண்டவனாக வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
குடிசையில் இருந்து ஆண்டியாக வாழ்ந்தவரும் இறந்து விடுகின்றார்
இருந்தார் இறப்பை நினைக்காது
இருப்பை நினைத்து மகிழ்கின்றார்
இருப்பார் மறுபிறப்பை நினைக்காது
இறப்பை நினைத்து அழுகின்றார்!
- தஞ்சை த இராமநாதன்

Arumai thanks
ReplyDelete🙏
ReplyDelete