எங்கும் எதிலும் கொரோனா
எவரும் பார்க்காதக் கொரானா எவரும் பார்க்க விரும்பாதக் கொரோனா பிடிக்காதவரை பிடித்தவரைப் பார்க்க பயப்படச் செய்தக் கொரோனா பிடித்தவரை பிடித்தவரும் பார்க்க பயப்படச் செய்தக் கொரோனா படித்தவரை படித்ததில் இல்லாததைப் படிக்க வைத்தக் கொரோனா படுக்காதவரை படுக்க வைத்துப் பாடம் படிக்க வைத்தக் கொரோனா வலிய வந்து வலியைத் தந்து நொந்து நோக வைத்தக் கொரோனா சாதி மறந்து சமயம் மறந்து எல்லோரும் பயப்படும் ஒரே கடவுள் கொரோனா!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment