சேற்றினிலே சோற்றைக் காணலாம்
பயிரைப் பறித்து பயிரை முடிந்துக் கட்டி வயலில் பயிர் மூடியை விளம்பினோம்
முடிந்தப் பயிரின் முடிச்சை அவிழ்த்து
இனுக்கு இனுக்காக சேற்றில் நட்டோம்
உள்ளங்கை முதல் முழங்கால் வரை சோறின் சேற்றில் நனைந்தே நின்றோம்
கால் கடுக்க கை வலிக்க உடல் வியர்க்க
வெயிலில் கிடந்து நோயைக் கடந்தோம்
ஆனால் இன்று,
இயந்திரத்தை இயங்கிட வைத்தோம் இயங்கியோரை நோய்ப்பட வைத்தோம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment