சும்மாடு அதுதான் பண்பாடு
சும்மாடுக் கட்டோ சுமையைத் தூக்க
முந்தானைக் கட்டோ மகவைத் தூக்க
தலையில் சுமையோ பசியைப் போக்க
இடுப்பில் சுமையோ வம்சத்தைக் காக்க
செருப்பில்லா நடை சாலையைக் கடக்குது
செருக்கில்லா உடை மானத்தைக் காக்குது!
- தஞ்சை த இராமநாதன்

சமுக அக்கறையுள்ள....கவிதைகள் சிறப்பு...
ReplyDelete🙏
Delete