கொளுத்தும் வெயிலைத் தணிக்கக்
குளிர்விக்கும் மழையாய் வருக சித்திரையே
வாட்டும் வறுமை நிலையைப் போக்க நல்ல விளைச்சலைத் தருக சித்திரையே
உண்மையான மெய்யுணர்வைக் காக்கப்
பொய்யை உடனே அகற்றிடு சித்திரையே
வேடதாரிகள் முகத்திரையைக் கலைக்க அனுபவப் பாடத்தைப் புகட்டிடு சித்திரையே
நல்லேறு பொன்னேறு பூட்டி உழைக்கப் புதுமையோடு பழமையைத் தந்திடு சித்திரையே
நல்ல நாளில் கொண்டாடிக் குதூகலிக்கப்
புத்தி கலந்த பக்தியைத் தந்திடு சித்திரையே
கோடைக்கு ஏற்ற குளிர்தரு மரங்கள்
எங்கெங்கும் இருக்க இடம் தந்திடு சித்திரையே
இடையிடையே இடியோடு கலந்த மழை
பொழிய அருள் தந்திடு சித்திரையே
அதை இதை தையத் தக்காவென கத்துவோர்
கத்தியைத் தூக்கினாலும் சித்திரைதான் முதல் மாதமென முத்திரையில் பதித்திடு சித்திரையே!
- தஞ்சை த.இராமநாதன்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமா சிறப்பான கவிதை
ReplyDelete🤝🤝
DeleteBest wishes for you sir 🙏🙏🙏
ReplyDelete🤝
Delete