என்னவரே மன்னவரே...
இருந்தவர் இருந்த இருக்கை அன்று இறந்தவர் இருந்த இருக்கை இன்று இருந்தவர் அமர்ந்ததால் சிறந்தது அன்று இறந்தவர் அமர்ந்ததால் சிறக்குது இன்று
ஏங்றேன் என்பார் என்னை அன்று ஏங்குறேன் அதை நினைத்து இன்று சாப்பிட்டியாங்றேன் என்பார் அன்று சாப்பிடமாட்டேங்கிறேன் நான் இன்று
கன்னத்தில் கை வைக்கப் பிடிக்காது அன்று கன்னத்தில் கை வைக்கப் பிடிக்குது இன்று நான் அழுததாக ஞாபகமில்லை அன்று நான் அழுவதே ஞாபகமில்லை இன்று!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment