உலகை உலாவரும் திருக்குறள்
தெரியாது என்பதால் மொழிப் பெயர்ப்பு செய்து தெரிந்து கொள்வது சிறப்பு புரியாது என்பதால் மொழி ஆக்கம் செய்து புரிந்து கொள்வதும் சிறப்பு
அதிகம் பேசுவது ஆபத்து என்பதை கதிர் கலாம் முஷ்கில் என்பர் அரபு மொழியில் ஆதலால் அதிகம் பேசாத திருக்குறளை அங்கீகரித்துள்ளனர் அரபு மொழியில்
கொஞ்சம் கொஞ்சம் பேசுவது நலம் என்பதை சோய சோய கலாம் கொயிஸ் என்பர் அரபு மொழியில் ஆதலால் கொஞ்சம் பேசி நெஞ்சம் நிறைய வைக்கும் திருக்குறளை அறிய முனைந்துள்ளனர் அரபு மொழியில்
அரபையறிந்தத் தமிழன் தமிழைக் கடல் கடந்துப் பரப்பும் விதம் பிரம்மாதம் மதத்தால் சிதறினாலும் குறளுக்குக் குரல் கொடுக்கும் விதம் பிரம்மாதம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment