தோளில் சுமந்து தூங்க வைத்த தாயின் புறப்பாட்டைத் தாங்கவே முடியாது தாயை இழந்து துடிக்கும் இதயத் துடிப்பின் வேகத்தோடுத் தூங்கவே முடியாது
தாயின் ஆறுதலான குரலை இழந்தால் ஏங்காமல் இருக்கவே முடியாது தாயின் மாறுதலான உடலைப் பார்த்தால் தேம்பாமல் இருக்கவே முடியாது
இறந்த தாயைச் செல்ல வேண்டாமெனச் சொல்லி அழுதிடவும் முடியாது இருந்த தாயை இழந்தோமேயெனச் சொல்லி அழாமலும் இருந்திட முடியாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment