பூவும் பூவையரும்
பூசைக்கும்-பூ ஆசைக்கும்-பூ; மணக்கும்-பூ மணக்கவும்-பூ
பூவைத் தேடும் தேனிக்கு இனிப்பு; பூவைக்கும் பூவைக்கு பூரிப்பு
பூவை விற்றப் பெண் பூக்காரி; பூவை பெற்றப் பெண் பணக்காரி
பூவால் பூவையர்க்கு சிறப்பு; பூவையரால் பூவுக்கும் சிறப்பு
பூத்துக் குலுங்கினால் பயனாகும்; பூவைக் குலுக்கினால் வீணாகும்
பூவைத் தலையிலும் சூட்டலாம்; பூவைக் காதிலும் சுற்றலாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment