படும் பாட்டின் படம்
உழைப்பவர் அடைகிறார் கஷ்டம் அதை ரசிப்பதில் பலருக்கு இஷ்டம்
விவசாயத்தை ஒழிப்பது திட்டம் உழைப்பைத் தடுப்பதும் திட்டம்
பரம்பரைத் தொழிலை துரத்துகிறாய் பக்குவமாய்க் காயை நகர்த்துகிறாய்
பாட்டாளியை நீ ஏமாற்றுகிறாய் படக் காட்சியை நீ மாற்றுகிறாய்
படம் பிடித்தவர் ஒரு விவசாயியா? நாற்றுப் பறிக்க நீ போவியா?
சிறுமைப்படுத்த படம் எடுத்தியா? பெருமைப்படுத்த படம் எடுத்தியா?
இளைஞர் எல்லாம் ஒதுங்கினர் இழிவு என நினைத்துப் பதுங்கினர்
வருங்காலம் உழவை விரும்பாதோ? கார்பரேட் குறி நிச்சயம் தப்பாதோ?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment