ஈரேழு குழிகளில் பக்கத்திற்கு ஓரேழு குழிகளுடன் இரு மங்கையரின் ஆட்டம்
குழிக்கு ஐந்தாக எழுபான் புளியங் கொட்டைகளோடு ஆடும் ஆட்டம்
ஐந்தில் குழிக்கொன்றைப் போட்டு தொடர்ந்து எடுத்துப் போடும் ஆட்டம்
போடும் தொடரில் காலி குழி வந்தால் அடுத்தக் குழி தன் வசமாகும் ஆட்டம்
காலியான குழியில் நான்கு சேர்ந்தால் நான்கும் தன் உடமையாகும் ஆட்டம்
இருப்பே நான்கெனில் குழிக்கு ஒன்று போட்டு கஞ்சிக் காய்ச்சும் ஆட்டம்
இருப்பதை இழந்தாலும் முயல்வதை உணர்த்தும் பல்லாங்குழி ஆட்டம்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment