மாடி வீட்டு நெல்
மாடுகட்டி போர் அடிப்பது போனது மாடிகட்டி பேர் எடுப்பது வந்தது
போரடித்த அக்காலம் போனது பேரெடுக்கும் இக்காலம் வந்தது
கோடியில் கட்டிய மாடி தோட்டம் மாடியில் வளர்ந்த மருதத் தோட்டம்
வயல் தேடி மாடி வந்தது மாடி தேடி நெல் வந்தது
இது நவீன உழவனின் யுக்தியா? கலிகாலத்தின் முத்திய பக்தியா?
காட்சிக்கு ஏற்ப காய்த்த நெற்கதிர் காச்சிக் குடிக்கவும் ஏற்ற நெற்கதிர்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment