சுற்று சூழலில் சீர்கேடு (மறு பதிவு)
நீரையும் தாங்கி சிறக்குது பூமி நீர் தங்காது சிறக்காது பூமி அனைத்தையும் சுற்றி வளைக்குது காற்று மூன்றும் சேர சுற்றுச் சூழலாகும் கூற்று
இயற்கையோடு இயற்கையாக இயற்கையுடன் இயற்கையாக இயற்கையின் இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த படிக்காத புத்திசாலிகளால் சுற்று சூழல் சீர்கெடாதக் காலம் அப்போது
ஆளுக்காள் அம்பலம் என்றாகி எல்லோருக்கும் எல்லாம் தெரியுமென்றாகி எல்லோரும் படித்திருக்கோம் என்றாகி மார் தட்டும் படித்த முட்டாள்களால் சுற்றுச் சூழல் சீர்கெடும் காலம் இப்போது
இயற்கைக் காட்டை வெட்டி நாசமாக்கி நாசமானதை செயற்கை நாடாக்கி நாட்டில் கயவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காடுபோல் நாடும் தடம் மாறியது இப்போது!
- தஞ்சை த இராமநாதன
👌 👍
ReplyDelete🙏🙏
ReplyDelete