தீக்குச்சி
பெருமையோடு பெட்டிக்குள் ஓய்வெடுத்து உரிமைக்காகக் காத்திருக்கும் தீக்குச்சி பொறுமையோடு பெட்டிக்குள் காத்திருந்து வறுத்தெடுக்கக் காத்திருக்கும் தீக்குச்சி
யாரும் சீண்டாதவரை பெட்டிக்குள் அடங்கி அடக்கமாய்க் கிடக்கும் தீக்குச்சி யாராவது சீண்டி உரசிவிட்டால் அடங்காது ஆரவாரமாய் மாறிவிடும் தீக்குச்சி
எரிபொருளோடு எரி வெப்பத்தையும் தன்னுள் உள்ளடக்கியது தீக்குச்சி எரிந்து எரித்துவிட்டு எரிந்தத் துன்பத்தையும் தன்னுள் உள்ளடக்குவது தீக்குச்சி
காய்ந்து உலர்ந்து கவலையற்று செயலாற்ற அடைந்து காத்திருப்பதும் தீக்குச்சி நனைந்து தளர்ந்து கவலையுற்று செயலற்று உடைந்து செத்துப்போவதும் தீக்குச்சி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment