நேரோடு நேராய்ப் பேசிய அண்ணா
ஆளும்வரை ஆளுபவர் கட்சியின் ஆட்சி அன்றுமுதல் அண்ணாவின் கட்சிதான் ஆட்சி
பிரிந்து பிறந்தன பலவிதமானக் கட்சி அனைத்திலும் அண்ணாவின் படக் காட்சி
புதுமைப் பிறந்த இடம் அண்ணாவின் காஞ்சி ஆன்மிகத் தத்துவம் சிறந்த இடமும் காஞ்சி
ஏழையின் சிரிப்பால் மலர்ந்தக் காஞ்சி மலர்ந்து தமிழ் மணம் பெற்றதும் காஞ்சி
அண்ணனாக வாழ்வில் வாழ்ந்து சென்றார் அண்ணாவாகவே வாழ்வோரை வென்றார்
உடுத்தினார் தனக்கென ஒரு தனி உடை நடத்தினார் தனக்கென ஒரு தனிப் படை
தமிழ்ப் பேச்சிலும் மிகுந்து நிற்கும் நகை நேரோடு நேராய் ஆங்கிலப் பேச்சிலும் மிகை
மேடைப் பேச்சில் தன் பாணி உருவாக்கினார் சொல் வீச்சில் தனிப் பாணி உருவாக்கினார்
தமிழோடு ஒப்பிட்டார் சீறிப் பாயும் புலியை டில்லி பெற்றது தீராப் பெரும் கிலியை
ஒரு விரல் புறத்தைக் காட்டும் தத்துவம் மூன்று விரல் அகத்தைக் காட்டும் தத்துவம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment