வேலை-வேளை-கவலை
தொடர் வேலைக்கிடையே ஒருவேளை ஓய்வு கிடைத்தால் அது இடைவேளை
தொடர் வேலைக்கிடையே வேறொரு வேலை கிடைத்தால் அது இடைவேலை
கூடை கடை வைத்து வியாபார வேலை செய்தால் அதுகூட கூடைகடை வேலை
சடை கடை வைத்து வியாபார வேலை செய்தால் அதுகூட சடைகடை வேலை
வேலைக்காக அலைந்து ஒருவேலை கூட கிடைக்காத வேளை தரும் கவலை
கிடைத்த வேலை முடிந்து ஓய்வு பெறும் வேளை மனம் பெறும் பெரும் கவலை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment