மரம்போல் வாழ முடியுமா?
வருவோர் போவோர்க்கெல்லாம் நிழல் கொடுத்து ஆக்ஸிஜனைத் தரும் மரம்
பறவைகள் இளைப்பாற கிளையோடு இலை கொடுத்து காக்கும் மரம்
வெய்யில் அடித்தாலும் உள் வாங்கி உணவாக்கிக் கொள்ளும் மரம்
பூத்தபின் காய்த்துக் குலுங்கி கனிவான பழத்தை தாராளமாய்த் தரும் மரம்
மரம் வேண்டுமென வெட்டினாலும் மரம் வேண்டாமென வெட்டினாலும்
வெட்டியாய் வெட்டியவர்க்கும் விறகாகி எரிந்து மடிந்து உரமாகிடும் மரம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment