எங்கிருந்து எங்கே?
வெளி நாட்டிலிருந்து விமானம் மூலம் உள் நாட்டிற்கு இறக்குமதியா? உள் நாட்டிலிருந்து விமானம் மூலம் வெளி நாட்டிற்கு ஏற்றுமதியா?
வருவோரிடம் வதியாக ஒட்டிக் கொண்டு நாடு விட்டு நாடு வந்து விடுகிறது வந்த இடத்தில் ஏழை எளியோரையும் விட்டு விடாமல் ஒட்டிக் கொள்கிறது
அங்கிருந்து இங்கு வந்ததா அல்லது இங்கிருந்து அங்கு சென்றதா தெரியாது
பரவும் வரை பரவும் விதம் அது யாருக்கும் தெரியாது! யாதும் ஊரே யாவரும் கேளிர் அது தமிழருக்கும் தெரியாதா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment