Saturday, 15 January 2022

மாடு இல்லாத வீட்டுப் பொங்கல்

 

மாடு இல்லாத வீட்டுப் பொங்கல் 

மாடு கட்டி வாழ்ந்தபோது மாட்டுக்கென            ஒரு பொங்கல் அது உற்சாகப் பொங்கல்              மாடி கட்டி வாழும்போது மாட்டைக்காணா          ஒரு பொங்கல் இது உல்லாசப் பொங்கல் 

பலவித மாமிச வகைகளைச் சேர்த்துத் தின்ன  மாட்டின் பெயரில் ஒரு பேதைப் பொங்கல்            குடித்துக் கூத்தாடி வெட்டிச் சண்டைபோட      மாட்டின் பெயரில் ஒரு போதைப் பொங்கல்

உழவு மாடு கிராமத்தை விட்டே ஓடி விட்டது  கறவை மாடு நகரச் சாலையிலே கூடி விட்டது  மாட்டோடு வாழ்வதைத் தொடராது விட்டோம்  மாடு பிடிப்பதை மட்டும் தொடர்ந்து விட்டோம் 

மரபை மறந்து மாட்டுப் பொங்கலையும் மறந்ததால் மறத் தமிழராக முடிமா?                மாண்பை மறந்து வீட்டுப் பொங்கலையும் மாற்றியதால் வீரத் தமிழராக முடிமா!

- தஞ்சை த.இராமநாதன் 

8 comments:

  1. அருமை அற்புதமான கருத்துகள் தொடரட்டும் தங்களது சேவை வளரட்டும் தங்களது சிந்தனைகள்.

    ReplyDelete
  2. அருமை அற்புதமான கருத்துகள் தொடரட்டும் தங்களது சேவை வளரட்டும் தங்களது சிந்தனைகள். அன்புடன் சீனு கலையரசன்.

    ReplyDelete
  3. Miga arumai unmayana karuthukkal

    ReplyDelete
  4. அருமை. 😊🙏

    ReplyDelete
  5. வணக்கம் எப்படியோ பொங்கல் திருநாள் நிலைத்துநின்றால் சரிதான். என் னசெய்ய?

    ReplyDelete
  6. அருமை

    ReplyDelete