அன்பும் மனிதமும்
அன்று பாரி கொடுத்தத் தேரு இன்றும் பாரினிலே நல்லப் பேரு அன்றே தேர்க் கொடுத்த ஊரு என்றும் உலகம் போற்றும் பாரு
அன்பால் ஒன்றாகும் இரு இதயம் அன்பால் ஒரு 'தாஜ்மகால்' உதயம் அன்பால் கிடைத்த உலக அதிசயம் அன்பால் கட்டி முடிக்கப்பட்ட விசயம்
சோழ பாண்டிய நாட்டிடையே உறவு அது பார்க்காமலே உண்டான உறவு பெருஞ் சோழன் உயிர்த் துறந்தார் பாண்டிப் புலவனும் சேர்ந்து இறந்தார்
உறவோடு அண்ணனுக்கு அதிகாரம் துறவோடு தமிழுக்கு சிலப்பதிகாரம் நற்காவியம் தந்த இளங்கோவடிகள் நீதிக் காத்தது அவர் தந்த அடிகள்
அன்று மதுரை தீ பற்றி எரிந்தது அங்கே அன்பின் சினம் தெரிந்தது மனிதம் மாண்டதால் மன்னன் மாண்டார் மன்னன் மாண்டதால் மாதேவியும் மாண்டார்
நகமும் சதையும் விரலின் இயற்கை கீதமும் ஓசையும் குரலின் இயற்கை உடலோடு மனம் உயிரான இயற்கை மனதோடு தொடர்பான தியானம் இயற்கை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment